ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும் அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர் தேறறி வாகிச் சிவானு பவத்தே சின்மய மாய்நான் திளைக்கின்ற போது மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே ஏறினை என்கின்றார் என்னடி அம்மா என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- நற்றாய் செவிலிக்குக் கூறல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்