ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்தன் புடனே போற்றாத குற்றமெலாம் பொறுத்தருளி எனைஇப் பூதலத்தார் வானகத்தார் போற்றிமதித் திடவே ஏற்றாத உயர்நிலைமேல் ஏற்றிஎல்லாம் வல்ல இறைமையும்தந் தருளியஎன் இறையவனே எனக்கே தோற்றாத தோற்றுவித்த துரையேஎன் உளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே