ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம் அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம் பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர் பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம் இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த ஊற்றமதாம் சமரசஆ னந்தசபை தனிலே ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்