ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர் அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர் வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின் சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே