ஆளாக நின்பொன் அடிக்கன்பு செய்திட ஐயநெடு நாளாக இச்சைஉண் டென்னைசெய் கேன்கொடு நங்கையர்தம் மாளா மயல்சண்ட மாருதத் தால்மன வாசிஎன்சொல் கேளா தலைகின்ற தால்ஒற்றி மேவும் கிளர்ஒளியே