ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும் கேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர் கிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில் நாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ நாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ தோளாஓர் மணியேதென் தணிகை மேவும் சுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே