ஆழி விடையார் அருளுடையார் அளவிட் டறியா அழகுடையார் ஊழி வரினும் அழியாத ஒற்றித் தலம்வாழ் உத்தமனார் வாழி என்பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ தோழி அனைய குறமடவாய் துணிந்தோர் குறிநீ சொல்லுவையே
ஆழி விடையீர் திருவொற்றி யமர்ந்தீ ரிருவர்க் ககமகிழ்வான் வீழி யதனிற் படிக்காசு வேண்டி யளித்தீ ராமென்றேன் வீழி யதனிற் படிக்காசு வேண்டா தளித்தா யளவொன்றை யேழி லகற்றி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ