ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று தீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான் சிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச் சாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே