ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பேர் அன்பே உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே நீவாஎன் மொழிகளெலாம் நிலைத்தபயன் பெறவே நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே