இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பேர் இன்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால் சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான் ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன் மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே