இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே என்னுயிர்த் தந்தையே இந்தச் சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார் ஐயவோ வஞ்சம்நின் அளவில் முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வநின் ஆணைநான் அறியேன்