இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி ஏன்றுகொள் பவரிலை அந்தோ அகழ்ந்தென துளத்தைச் சூறைகொண் டலைக்கும் அஞரெலாம் அறுத்தருள் புரிவாய் புகழ்ந்திடுந் தொண்டர் உளத்தினும் வெள்ளிப் பொருப்பினும் பொதுவினும் நிறைந்து திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே செல்வமே சிவபரம் பொருளே