இசைத்திடவும் நினைத்திடவும் பெரிதரிதாம் தனித்தலைமை இறைவா உன்றன் நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி ஐந்தொழில்செய் நாத ராலும் தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத் தங்கள்சுதந் தரத்தால் இங்கே அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே