இசைந்தான்என் உள்ளத் திருந்தான் எனையும் நசைந்தான்என் பாட்டை நயந்தான் - அசைந்தாடு மாயை மனம்அடக்கி வைத்தான் அருள்எனும்என் தாயைமகிழ் அம்பலவன் தான்