இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள் எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன் கொச்சை நெஞ்சம்என் குறிப்பில்நில் லாது குதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில் பிச்சை உண்டெனிற் பிச்சரிற் சீறும் பேய ருண்மனை நாயென உழைத்தேன் செச்சை மேனிஎம் திருவொற்றி அரசே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே