இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுமோர் மடமே உடையேன் தனக்கருள்நீ வழங்கல் அழகோ ஆநந்த நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத் திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே