இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித் தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம் சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல் நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம் ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த் திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம் திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்