இட்டங் களித்த தொற்றியுளீ ரீண்டிவ் வேளை யெவனென்றேன் சுட்டுஞ் சுதனே யென்றார்நான் சுட்டி யறியச் சொலுமென்றேன் பட்டுண் மருங்குற் பாவாய்நீ பரித்த தன்றே பாரென்றே யெட்டுங் களிப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ