இட்டவகை வாழ்கின்றேன் எந்தாய் நானே எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என்செய் வேன்நின் மட்டலர்சே வடிஆணை நினைத்த வண்ணம் வாழ்விக்க வேண்டும்இந்த வண்ணம் அல்லால் துட்டன்என விடத்துணிதி யாயில் அந்தோ சூறையுறு துரும்பெனவும் சுழன்று வானில் விட்டசிலை எனப்பவத்தில் விழுவேன் அன்றி வேறெதுசெய் வேன்இந்த விழல னேனே