இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும் எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே