இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர் இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக் கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ பிணக்கறிவீர் புரட்டறிவீர்() பிழைசெயவே அறிவீர் பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர் மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே வடைக்குழம்பே சாறேஎன் றடைக்க அறிவீரே () பிரட்டறிவீர் - பொ சு பதிப்பு