இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல் ஏகமுமாய் அனேகமுமாய் இலங்குபரம் பரனே அணையேதும் இன்றிநிறை பெரும்புனலே அதன்மேல் அனலேஎன் அப்பாஎன் அவத்தைஎலாம் கடத்தும் புணையேமெய்ப் பொருளேமெய்ப் புகழேமெய்ப் புகலே பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும் துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே