இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய் இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே மேனிலைக் கேற்றிய மெய்நிலைச் சுடரே பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே சதுமறை முடிகளின் முடியுறு சிவமே தனிநட ராசஎன் சற்குரு மணியே