இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தைநின் திருப்பணி விடுத்தே சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான் தெரிந்தநாள் முதல்இது வரையும் அத்தனே அரசே ஐயனே அமுதே அப்பனே அம்பலத் தாடும் சித்தனே சிவனே என்றென துளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்