இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா என்பிழை யாவையும் அன்பினில் கொண்டே சத்திய மாம்சிவ சித்தியை என்பால் தந்தெனை யாவரும் வந்தனை செயவே நித்தியன் ஆக்கிமெய்ச் சுத்தசன் மார்க்க நீதியை ஓதிஓர் சுத்தபோ தாந்த அத்தனி வீதியில் ஆடச்செய் தீரே அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே