இத்தனைஎன் றிடமுடியாச் சத்திஎலாம் உடையானை எல்லாம் வல்ல சித்தனைஎன் சிவபதியைத் தெய்வமெலாம் விரித்தடக்கும் தெய்வம் தன்னை எத்தனையும் என்பிழைகள் பொறுத்ததனிப் பெருந்தாயை என்னை ஈன்ற அத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ