இந்தா ரிதழி யிலங்குசடை யேந்த லிவரூ ரொற்றியதாம் வந்தார் பெண்ணே யமுதென்றார் வரையின் சுதையிங் குண்டென்றே னந்தார் குழலாய் பசிக்கினும்பெண் ணாசை விடுமோ வமுதின்றே லெந்தா ரந்தா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ