இந்தியமாய்க் கரணாதி அனைத்து மாகி இயல்புருட னாய்க்கால பரமு மாகிப் பந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி வந்தஉப சாந்தமதாய் மவுன மாகி மகாமவுன நிலையாகி வயங்கா நின்ற அந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும் அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே