இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர் இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன் அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன் பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன் தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே