இனியநின் திருத்தாள் இணைமலர் ஏத்தேன் இளமுலை மங்கையர்க் குள்ளம் கனியஅக் கொடியார்க் கேவல்செய் துழன்றேன் கடையனேன் விடயவாழ் வுடையேன் துனியஇவ் வுடற்கண் உயிர்பிரிந் திடுங்கால் துணைநினை அன்றிஒன் றறியேன் தனியமெய்ப் போத வேதநா யகனே தடம்பொழில் ஒற்றியூர் இறையே