இன்சுவை உணவு பலபல எனக்கிங் கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன் நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும் நீதரு வித்திடில் அதுநின் தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும் சம்மதம் இல்லைநான் தானே என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடிய தும்இலை ஈண்டே