இன்னல் உலக இருள்நடையில் நாள்தோறும் துன்னவரும் நெஞ்சத் துடுக்கழிய நல்லோர்கள் உன்னல்உறும் தெள்ளமுதே ஒற்றிஅப்பா என்வாய்உன் தன்அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ