இன்னவா றடியேன் அச்சமுந் துயரும் எய்திநின் றிளைத்தனன் அந்தோ துன்னஆ ணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான் உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என்செய்வேன் எனது மன்னவா ஞான மன்றவா எல்லாம் வல்லவா இதுதகு மேயோ