இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில் எய்துவித் திடுதியேல் அதுவுன் தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும் சம்மதம் அன்றுநான் இதனைப் பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப் பால்உணும் காலையே உளதால் மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என் மதிப்பெலாம் திருவடி மலர்க்கே