இன்னே எளியேன் பொய்யுடையேன் எனினும் அடியன் அலவோநான் என்னே நின்னைத் துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே அன்னே என்றன் அப்பாஎன் ஐயா என்றன் அரசேசெம் பொன்னே முக்கட் பொருளேநின் புணர்ப்பை அறியேன் புலையேனே