இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார் வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன் அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத் துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே