இன்பப் பெருக்கே அருட்கடலே இறையே அழியா இரும்பொருளே அன்பர்க் கருளும் பெருங்கருணை அரசே உணர்வால் ஆம்பயனே வன்பர்க் கரிதாம் பரஞ்சோதி வடிவேல் மணியே அணியேஎன் துன்பத் திடரைப் பொடியாக்கிச் சுகந்தந் தருளத் துணியாயே