இன்பம் என்பது விழைந்திடர் உழந்தேன் என்னை ஒத்தஓர் ஏழைஇங் கறியேன் துன்பம் என்பது பெருஞ்சுமை ஆகச் சுமக்கின் றேன்அருள் துணைசிறி தில்லேன் அன்பர் உள்ளகத் தமர்ந்திடுந் தேவர் அடிக்குற் றேவலுக் காட்படு வேனோ வன்பர் நாடுறா ஒற்றியூர் உடையீர் வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே
இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள் இருக்கின்ற நாதரே வாரீர் இருக்கின் பொருளானீர் வாரீர் வாரீர்