இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள் இறைவியொடும் அம்பலத்தே இலங்கியநின் வடிவை வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம் மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம் ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் ஈங்கெவர்கள் புகல்வார் துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார் தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே