இன்பற்ற இச்சிறு வாழ்க்கையி லேவெயி லேறவெம்பும் என்பற்ற புன்புழுப் போல்தளர் ஏழை எனினுமிவன் அன்பற்ற பாவிஎன் றந்தோ எனைவிடில் ஐயவையத் தென்பற்ற தாகமற் றில்லைகண் டாய்எனை ஏன்றுகொள்ளே