இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட மிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமாரே
இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார் எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார் அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார் அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார் என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார் என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும் சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே