இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவள் ஆகி அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி