இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே என்உயிர்க் கமுதமே என்தன் அன்பிலே பழுத்த தனிப்பெரும் பழமே அருள்நடம் புரியும்என் அரசே வன்பிலே விளைந்த மாயையும் வினையும் மடிந்தன விடிந்ததால் இரவும் துன்பிலேன் இனிநான் அருட்பெருஞ் சோதிச் சூழலில் துலங்குகின் றேனே