இன்புடையார் நின்அன்பர் எல்லாம் நின்சீர் இசைக்கின்றார் நான்ஒருவன் ஏழை இங்கே வன்புடையார் தமைக்கூடி அவமே நச்சு மாமரம்போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத் துன்புடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன் தூய்மைஎன்ப தறிந்திலேன் சூழ்ந்தோர்க் கெல்லாம் அன்புடையாய் எனைஉடையாய் விடையாய் வீணே அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ