இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே தூயதிரு அடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே