இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம் எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம் அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம் அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப் பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின் மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே