இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற் கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை அருட்சோதி இயற்கை என்னும் துப்பாய உடலாதி தருவாயோ இன்னும்எனைச் சோதிப் பாயோ அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ் வடியேனால் ஆவ தென்னே