இமைக்கும் அவ்வள வேனும்நெஞ் சொடுங்கி இருக்கக் கண்டிலேன் இழிவுகொள் மலத்தின் சுமைக்கு நொந்துநொந் தையவோ நாளும் துயர்கின் றேன்அயர் கின்றஎன் துயரைக் குமைக்கும் வண்ணம்நின் திருவருள் இன்னும் கூடப் பெற்றிலேன் கூறுவ தென்னே உமைக்கு நல்வரம் உதவிய தேவே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே