இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம் எனைத்தொன்றும் வேண்டாத இயற்கைவருந் தருணம் எம்மையினும் நிறைசொருப சுத்தசுகா ரம்பம் இயற்சொருப சுத்தசுக அனுபவம்என் றிரண்டாய்ச் செம்மையிலே விளங்குகின்ற திருவடிகள் வருந்தச் சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய் உம்மையிலே யான்செய்தவம் யாதெனவும் அறியேன் உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே