இயங்கா மனமும் கயங்கா நிலையும் இகபரத்தே மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்தருள்வாய் வயங்கா நிலத்தின் முயங்கா உயர்தவர் வாழ்த்துகின்ற புயங்கா துதித்தற் குயங்கா தவருட் புகுந்தவனே